Tamil Articles

Tree of Victory

யாத்திராகமம் 15:25, "மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்".  கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பிக்கிறார். அவனது ஜெபத்திற்குரிய பதில் அந்த மரத்தில் தான் இருக்கிறது என்பதை தேவன் மோசேக்கு தெரிவிக்க விரும்பினார்.  அதுபோலவே, உங்களுக்காகவும் ஒரு மரம் பதிலுடன் காத்திருக்கிறது.  சில நேரங்களில் நம் ஜெபத்திற்கு பதில் நாம் எதிர்பாராத இடங்களிலிருந்து வரும். ஆனால் நம் விசுவாசக் கண்களினால் அதை நாம் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும். மரத்தின் கிளை தண்ணீரில் போடப்பட்டபோது, கசப்பாக இருந்த தண்ணீர் இனிப்பான தண்ணீராக மாறியது. கர்த்தரும் கசப்பான தண்ணீர் போன்ற சூழ்நிலையை இனிப்பாக மாற்றுகிறார். அல்லேலூயா!
பிரசங்க பகுதியை கேட்டு ஆசீர்வதிக்கப்படுவீர்களாக.  உங்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Resolution Checklist

A New Year is seen as a fresh beginning, a time for resolutions and promises on habits and behaviors we’d like to incorporate into this new start. We encourage you to plan and decide on some resolutions for 2021. We will be explaining them in detail tomorrow during our Sunday Online Service.

Here are 10 Resolution guidelines to support and encourage you in your New Year’s New Beginning. 
Be Blessed!

Praise Checklist

As we are getting ready to finish 2020 and begin 2021, let us recollect all the simple blessing that we sometimes might take it for granted.
He is our Faithful God and He will carry us Upon His Shoulders in the New Year 2021.
Read this Checklist and let us Praise the Lord.
Be Blessed!

அவர்கள் சாஷ்டாங்கமாய் விழுந்து அவரைப் பணிந்து கொண்டார்கள். மத்தேயு 2:11

இந்த புதிய டிசம்பர் மாதத்தை  துவங்குகின்ற நாம் கர்த்தருக்கு நன்றியோடு துதிகளை ஏறெடுக்க நம் இதயங்களை ஆயத்தப்படுத்துவோம். இந்த ஆண்டு உண்மையிலேயே பலவிதங்களில் சவால் நிறைந்ததாகவே இருந்தாலும், தேவ பிள்ளைகளாகிய நாம், மிகவும் சிறந்த அருமையான ஈவாக இருக்கும், தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பெற்றிருக்கின்றோம்.

அவர் செய்த எல்லாவற்றிற்காகவும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு, இந்த 2020-ன் அடுத்த 31 நாட்களும் தொடர்ச்சியாக அவரை தொழுது கொள்ளுவோம்.

இந்த ஆண்டைக் கடந்து புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்கும்போது, நம் பரலோக தகப்பனின் பிரசன்னமும், பாதுகாப்பும் உங்களோடிருந்து உங்களை மகிழ்ச்சியினாலும், ஆனந்தத்தினாலும் நிறைக்கவேண்டுமென்று உங்களுக்காக ஜெபிக்கின்றோம்.

ஒருவரும் பூட்டக் கூடாதபடிக்கு அவன் திறப்பான். ஒருவரும் திறக்கக் கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். ஏசாயா:22:22

உங்கள் வாழ்க்கையில், இனி அவ்வளவுதான், சாலையின் முடிவுக்கே வந்து விட்டோம் என நினைக்க வைக்கும் சூழ்நிலைகளை சந்தித்திருக்கிறீர்களா ?  அச்சமயங்களில் கரங்களை மேலே உயர்த்தி போதும், போதும் என கதற தான் முடியும். இதனை என்னால் தாங்க முடியாது, இனி ஒரு நாள் கூட வாழ முடியாது என நினைத்திருக்கிறீர்களா ?
இது போன்ற சூழ்நிலைகளை நான் பல தடவை கடந்து வந்திருக்கின்றேன். எனவே, உங்களுக்கு எப்படிப்பட்ட வேதனை இருக்கும் என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. இன்றைக்குப் போதகர் காலேப் அவர்களும், நானும் இது போன்று நாங்கள் சந்தித்த சில சூழ்நிலைகளை நியாபகத்தில் கொண்டு வந்தோம்.  நாங்கள் திரும்பி பார்த்த போது, அந்த கடினமான சூழ்நிலைகள் எங்களை சற்றும் எதிர்பாராத புதிய வாசல்களுக்கு நேராக நடத்தியதையும் எங்கள் வாழ்க்கையில் மிகவும் இருண்டு காணப்பட்ட நேரங்கள், கற்பனை செய்ய முடியாத ஆசீர்வாதங்களின் துவக்கமாக இருந்ததையும் உணர முடிந்தது. தேவன் உங்களுக்கும் திறக்கும்படி காத்திருக்கும் புதிய வாசலை வைத்திருக்கிறார். உங்கள் மேல் அன்பு வைத்திருக்கும் உண்மையுள்ள தேவனை நம்பும்படி இன்றைக்கு உங்களை உற்சாகப்படுத்த விரும்புகிறேன்.
நமது அன்பு தேவனின் சமூகத்தை நீங்கள் முழுவதும் அனுபவிக்கவும் அவரின் கிருபையும், அன்பும் உங்களை மூடிக்கொள்ளவும் வேண்டுதல் செய்கிறோம். 

அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; ஏசாயா:46:10

“நான் மட்டுமே எதிர்காலத்தில் நடக்க போவதை முன்கூட்டியே சொல்ல முடியும்.  நான் எதை விரும்புகின்றேனோ, அதை செய்வதால், நான் திட்டம் பண்ணுகின்ற அனைத்தும் நடந்தேறும்” என்று புதிய வாழ்வியல் வேதாகமம் கூறுகிறது.  

இது உங்கள் எதிர்காலத்தை மிக துல்லியமாக வடிவமைக்ககூடிய ஒரு பிதா உங்களுக்கு இருக்கிறார் என்பதை நினைப்பூட்டி உற்சாகப்படுத்தும் அருமையான வசனம்.

சில நேரங்களில் நம் வாழ்க்கையில் சரியான பதில் கிடைக்காத அநேக கேள்விகள் உங்கள் சிந்தையில் எழும்பலாம்.  அதிகமாக சிந்திப்பது குழப்பத்தையும், நாளடைவில் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது.  ஆனால் கர்த்தருடைய பிள்ளையாக நீங்கள் எப்பொழுதும் உங்களுக்கு நங்கூரமாக இருக்கும் வசனத்திற்கு செல்லலாம்.

ஓராண்டு அல்லது பத்து ஆண்டுகள் கழித்து உங்கள் வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை தேவன் அறிவார் என்று வசனம் கூறுகிறது. அவர் திட்டம் பண்ணினவைகளெல்லாம் நிறைவேறும். அல்லேலூயா.

நாம் கர்த்தருடைய வார்த்தையை அறிக்கை செய்து எல்லாவற்றையும் அறிந்த அவரின் கரங்களில் நம் வாழ்க்கையை அர்ப்பணிப்போம்.

உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். ஆதியாகமம்:13:14

“உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்” என்று தேவன் தம் ஜனங்களுக்குக் கட்டளைக் கொடுப்பதை வேதாகமத்தில் பலமுறை வாசிக்கிறோம். இயற்கையாக, ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே நம்மால் பார்க்க முடியும்.  ஆனால், தம் பிள்ளைகள் விசுவாசப் பார்வையுடையவர்களாய் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறார்.

நீங்கள் இன்றைக்கு எப்படிப்பட்ட சூழ்நிலையில் காணப்படுகிறீர்கள்? இப்போதைய சூழ்நிலைகள் சில நிஜமான காரியங்களை உங்களுக்குக் காண்பிக்கலாம்.  இன்றைக்கு சிறிது நேரம் கண்களை மூடி கர்த்தர் உங்களுக்கென்று ஆயத்தமாக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பார்க்க அவர் உங்களுக்கு உதவும்படி கேளுங்கள்.

உங்களின் அபரிவிதமான வளர்ச்சியை முதலில் பார்க்கும்படி கர்த்தர் விரும்புகிறார்.  உங்கள் சுகத்தைப் பாருங்கள், உங்களுடைய எதிர்கால வாழ்க்கை துணையைப் பாருங்கள், உங்களின் புதிய வேலையைப் பாருங்கள்.  உங்கள் பொருளாதார ஆசீர்வாதங்களைப் பாருங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பாருங்கள்.

இந்த விசுவாசப் பயணத்தில் நீங்கள் நடக்கும்போது கர்த்தர் உங்களோடிருந்து உங்களுக்கு உதவும்படி வேண்டுகிறோம்.  அவரின் சமாதானமும் கிருபையும் உங்களில் நிலைத்திருப்பதாக.  

நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். மாற்கு:11:24

கர்த்தரின் வார்த்தை மற்றும் அவரின் வாக்குதத்தங்கள் மூலம் பார்க்கும்படி நம் கண்களை நாம் பழக்கப்படுத்தும்போது, நம் தரிசனத்தோடு வாயும் தானாகவே சேர்ந்துக்கொள்ளும்.  நம் வார்த்தைகள் அதிக வல்லைமை உள்ளதாக காணப்படும் – இப்படித்தான் தேவன் நம்மை சிருஷ்டித்திருக்கிறார்.
நாம் எதை நம்பியிருக்கிறோமோ அதை தைரியமாக பேசி அறிக்கை செய்ய இன்றைக்கு ஒரு சவாலை எடுத்துக்கொள்ளுவோம்!

சுகத்திற்காக ஜெபிக்கின்றீர்களா? “நான் சுகமானேன்” என்று அறிக்கை செய்வோம் நிலையான பொருளாதாரத்தை விரும்புகிறீர்களா? “கர்த்தரின் ஆசீர்வாதங்கள் என்னை ஆட்கொள்ளும்” என்று சொல்லுவோம்.

திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றீர்களா? கர்த்தர் தனிமையானவர்களுக்கு வீடு வாசலை உண்டு பண்ணுகிறார்” என்று சொல்லுவோம்.

ஒரு வேலைக்காக தேடுகின்றீர்களா? “கர்த்தர் என் வேலையை நிலைப்படுத்துவார்” என்று சொல்லுவோம்.
விசுவாசத்தில் பார்ப்போம், விசுவாசத்தில் பேசுவோம், விசுவாசத்தில் கேட்போம் – மாற்கு 11:24.

கர்த்தருடைய வார்த்தையை பேசும்போது, உங்கள் விசுவாசம் அதிகரிக்க வேண்டும் என வேண்டுகிறோம். நாம் விசுவாசத்தைப் பேசும்போது நம்மை உண்டாக்கினவர் மகிழ்கிறார்.