ways to Join our Services

Watch ONLINE

இங்கே கிளிக் செய்க

In-Person Services

இங்கே முன்பதிவு செய்யவும்.

திருச்சபைக்கு நேரடியாக வந்து ஆராதிப்பவர்களுக்கான முக்கிய வழிமுறைகள் :

கட்டாய சரிபார்த்தல்

எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.  ஆலயத்திற்குள் ஒருவரை அனுமதிப்பதற்கு முன் அவரின் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும்.

நுழைவாயில்

ஆலயத்திற்கு உள்ளே நுழைவதற்கும், வெளியே செல்வதற்கும் பிரிக்லின் சாலையிலுள்ள 1-ஆம் நுழைவாயில் மட்டுமே திறக்கப்படும். மற்ற அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டிருக்கும்.

வாகனங்கள் நிறுத்துமிடம்

 வாகனங்களை நிறுத்த இடம் தேவைப்படுவோர் தயவுசெய்து முன்கூட்டியே பதிவு செய்து (RSVP) அதன் அச்சடிக்கப்பட்ட சீட்டினை உங்கள் வாகனத்தின் டாஷ்போர்டில் (Dashboard) வைக்கவும்.

சமூக இடைவெளி

சமூக இடைவெளி வழிமுறைப்படி இருக்கைகள் அமைக்கப்படும்.  முதலில் வருபவருக்கு முதலிடம் என்கிற அடிப்படையில் இருக்கைகள் ஒழுங்கு செய்யப்படும்.

முன் பதிவு

முன்பதிவு அவசியம். ஆராதனைகளிலே கலந்து கொள்ள அனுமதி எல்லோருக்கும் இலவசம்.  வாகனங்கள் நிறுத்துமிடமும் இலவசம்.  ஆனால்,  QR Code வாயிலில் நுழையும் போது ஸ்கேன் செய்யப்படும்.

சிறுவர் கூடுகை

நாங்கள் அறிவிக்கும் வரை, சிறுவர்கள் கூடுகை நடைப்பெறாது. சிறுவர்கள் தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து ஆராதனைகளில் பங்கேற்கலாம்.

நேரலை ஆராதனைகள்

திருச்சபைக்கு நேரடியாக வந்து ஆராதிப்பதற்கான தற்போதைய மாற்றங்கள் குறித்த கேள்விகள்.

ஆராதனை விபரங்கள்

ஆலயத்திற்கு வரவேற்கிறோம்! நாம் அனைவரும் நேரடி ஞாயிறு ஆராதனைக்காக மீண்டும் ஒன்றுக் கூடுகிறோம்! ஞாயிறு காலை இனி வித்தியாசமானதாக இருக்கத் துவங்கும் என்பதை நினைத்து நான் பரவசமடைகிறேன்!  மேலும் விவரங்களுக்கு கீழ்காணும் முக்கியக் குறிப்புகளை கவனிக்கவும்…

முன்னெச்சரிக்கை

  • சுகாதாரமான நல்ல சூழலை கூடுமானவரை ஏற்படுத்த, உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தில் எவருக்கேனும் கடந்த வாரத்தில் கீழ்காணும் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தயவு செய்து நேரலையில் எங்களுடன் ஆராதனையில் பங்கெடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தவிர்க்கவும்

  • 100-க்கு மேல் ஜுரம் அல்லது மூச்சு விடுவதில் சிரமம்.
  • இருமல் அல்லது தொண்டை வலி.
  • கோவிட்-19 இருப்பதாக உறுதி செய்யப்பட்ட ஒருவரிடம் தொடர்பில் இருந்தால் (முந்தைய 14 நாட்களில்).

சுத்தம் செய்தல்

  • அதிகமாக உபயோகப்படுத்தப்படும் இடங்கள், மற்றும் கழிவறைகள் தொடர்ச்சியாக அவ்வப்போது (ஆராதனைகளுக்கு இடையிலும், ஆராதனையின் போதும்) சுத்தம் செய்யப்படும், மற்றும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர்கள் வைக்கப்பட்டிருக்கும்.

மாற்றங்கள்

  • இந்த மாற்றங்கள் நிரந்தரமானதா?  இல்லை, நாம் கோவிட்-க்கு முன்பு கூடியதைப் போல திரும்பவும் கூடும் வரை, நமது தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இது அடுத்தப் படியாகும்.